|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| |
|
|
|
ஆன்மீகமும் தியானமும் : அன்னை விளக்கம்!
| ஆன்மீகமும் தியானமும் : அன்னை விளக்கம்! | | | | வெள்ளி, 9 நவம்பர் 2007( 19:16 IST ) | | | |
| | |
| நீ உன்னுடைய ஒருமுனைப்புச் சக்தியை எல்லாம் மனத்தையோ பிராணனையோ தூலப்பொருளையோ சார்ந்த ஒரு முனையில் குவிப்பதில் வெற்றி பெற்றால் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நீ அதை ஊடுருவி இன்னொரு உணர்விற்குச் சென்றுவிடுவாய். இன்னுஞ்சிலர், தங்களுடைய தலையிலிருந்து எல்லா இயக்கங்களையும் விரட்டிவிட்டு மோன அமைதிபெற முயல்வார்கள். இது மிக மிகக் கடினம்; இருபத்தைந்து ஆண்டுகள் முயன்றும் வெற்றிபெறாதவர்கள் இருக்கிறார்கள், ஏனெனில் இது காளையைக் கொம்புகளைப் பிடித்து அடக்குவதைப் போன்றது.
இன்னுமொரு வகையான தியானம் உள்ளது. இதில் நீ எண்ணங்களை நிறுத்த முயலாமல் அமைதியாக இருக்க வேண்டும். ஏனென்றால் பல எண்ணங்கள் இயந்திரத்தன்மை கொண்டவை, இவற்றை நீ நிறுத்த முற்பட்டால் அதற்கு பல ஆண்டுகள் தேவைப்படலாம், அதன் பின்னரும் பலன் நிச்சயமில்லை. ஆகவே அப்படிச் செய்யாமல் உனது உணர்வையெல்லாம் ஒன்று திரட்டி, உன்னால் எவ்வளவு அமைதியாக இருக்க முடியுமோ அவ்வளவு அமைதியாக இருக்க வேண்டும், புற விஷயங்கள் எதிலும் உனக்குச் சிறிதும் அக்கறை இல்லாததைப் போல் அவற்றிலிருந்து நீ விலகி நிற்க வேண்டும். பிறகு திடீரென உன்னுடைய ஆர்வத் தீயைத் தூண்டி வருவதையெல்லாம் அதில் விட்டெறிந்து தீ உயர உயர, இன்னும் உயர உயரச் சுடர்விட்டு எரியும்படி செய்ய வேண்டும். அந்தச் சுடருடன் உன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டு, வேறு எதைப் பற்றியும் சிந்திக்காமல் உன்னுடைய உணர்வின், ஆர்வத்தின் கடை கோடி முனைக்கு உயர்ந்து செல்ல வேண்டும் - விளையக் கூடிய பயனைப் பற்றி ஒரு நிமிடங்கூடச் சிந்திக்காமல், எது நடக்கக்கூடும் என்றோ, குறிப்பாக எது நடக்காது போகலாம் என்றோ எண்ணமிடாமல், எல்லாவற்றிற்கும் மேலாக ஏதாவது வரவேண்டும் என்று ஆசைப்படாமல், ஆர்வம் மட்டும் இருக்க வேண்டும், அது மேலே மேலே மேலே உயர்ந்து செல்ல வேண்டும், இவ்வாறு மேலே சென்றுகொண்டிருக்கிற இடைவிடாத ஒருமுனைப்பில் மேலும் மேலும் தீவிரமடைந்து கொண்டிருக்கிற ஆர்வத்தினால் ஏற்படுகிற மகிழ்ச்சிக்காகவே ஆர்வமுற வேண்டும். அப்பொழுது என்ன நேருகிறதோ அதுவே உனக்கு மிகவும் நன்மையானதாக இருக்கும் என்று உறுதி கூறுவேன். அதாவது, நீ இதைச் செய்தால், எவ்வளவு தூரம் முன்னேறுவதற்கு உன்னிடம் வாய்ப்பிருக்கிறதோ அவ்வளவு தூரம் நீ முன்னேறுவாய். முன்னேறுவதற்கான வாய்ப்புகள் எல்லோரிடமும் ஒன்று போலிராது. ஆனால் அப்பொழுது மோனமாக இருக்க முயலுதல், தோற்றங்களுக்குப் பின்னால் போதல், பதிலளிக்கும் சக்தியை அழைத்தல், உனது கேள்விகளுக்குப் பதில்களையெல்லாம் உண்மையல்லாத ஆவிபோல் மறைந்து போகும். இந்தச் சுடரில் மேலேறும் இந்த ஆர்வத்தில் உணர்வோடு வாழ்வதில் நீ வெற்றிபெற்றுவிட்டால், உடனடியாகப் பலன் கிடைக்காவிட்டாலும், சில நாட்கள் சென்றபின் ஏதாவது நிகழும்.
|
|
|
|
| | |
|
|
|
|
|
|
|